“எதுக்குடா இப்படி பண்றீங்க”.. அம்மா திட்டியதால் அண்ணன் தம்பி இருவரும் எடுத்த விபரீத முடிவு… மனதை உலுக்கும் சம்பவம்…!

By Nanthini on ஆவணி 1, 2025

Spread the love

திருவள்ளுவர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் கம்மவார் பாளையம் கிராமத்தை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவருக்கு விக்னேஷ் (28) என்ற மகனும் கணேஷ் (24) என்ற மகனும் உள்ளனர். கணேஷ் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வரும் நிலையில் அங்கு பணியாற்றும் பெண்ணை காதலித்து வந்தார். இதுகுறித்து தாயார் ஜெயலட்சுமிக்கு தெரிய வந்ததால் அவரை கண்டித்துள்ளார். இதனால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் விக்னேஷ் மற்றும் கணேஷ் இருவரும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு சென்ற நிலையில் காதல் விவகாரம் ஒருபுறம் வருத்தத்தை ஏற்படுத்த மறுப்பக்க மகன்கள் இருவரும் குடித்துவிட்டு சுற்றுகிறார்கள் என்ற ஆதங்கத்தில் ஜெயலக்ஷ்மி இருவரையும் கடுமையாக திட்டி உள்ளார்.

இதனால் மனமுடைந்த அண்ணன் தம்பி இருவரும் வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்த நிலையில் உடனே ஜெயலக்ஷ்மி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இரண்டு மகன்களையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். ஆனால் சிகிச்சை பலனென்று இருவருமே அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே நேரத்தில் இரண்டு மகன்களும் உயிரிழந்ததால் அவர்களின் உடல்களை பார்த்து ஜெயலட்சுமி கதறி அழுத சம்பவம் அனைவரையும் கலங்க வைத்தது.