பட்டப் பகலில் பயங்கரம்: பள்ளி மாணவியை வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்ற நபர்… வைரலாகும் அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!!!

By Soundarya on ஆடி 31, 2025

Spread the love

நொய்டாவில் தனியார் பள்ளியின் முன்பு மாணவி ஒருவர் கடத்தி செல்லப்பட்ட வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த முழு சம்பவமும் அருகில் உள்ள சிசிடிவி கேமரா ஒன்றில் பதிவாகியுள்ளது. அதில் ஒரு இளைஞர் மாணவியை வலுக்கட்டாயமாக காரில் அமர வைத்து அங்கிருந்து தப்பித்து செல்கிறார். இதனையடுத்து இது குறித்த தகவல் கிடைத்தவுடன் நொய்டா காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து மாணவியை பாதுகாப்பாக மீட்க ஒரு சிறப்பு குழு அமைத்தது.

இதன்பின்னர் சில மணி நேரங்களுக்குள் குற்றம் சாட்டப்பட்டவரை போலீசார் கைது செய்துள்ளார்கள். மேலும் மாணவி பாதுகாப்பாக அவருடைய பெற்றோருடன் ஒப்படைக்கப்பட்டுள்ளார். காவல்துறையின் விசாரணையின் படி குற்றம் சாட்டப்பட்டவர்  மோனு யாதவ். இவர் கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் போலீசாரால் மீட்கப்பட்டது.   தற்போது குற்றம் சாட்டப்பட்ட  மோனு யாதவ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் மாணவிக்கு உடல் ரீதியாக எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. முற்றிலும் பாதுகாப்பாக இருக்கிறார் என்று போலீசார் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.