விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தோடு கூட்டணி குறித்து இன்னும் சற்றுநேரத்தில் ஓபிஎஸ் அறிவிக்க உள்ளார். அதிமுக – பாஜக கூட்டணி அமைந்ததையடுத்து ஓ.பன்னீர் செல்வத்தை மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் சந்திக்காமல் புறக்கணித்தனர். இதனால், அவரின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியது.
இந்த நிலையில் தான் தனது ஆதாரவாளர்களுடன் தற்போது ஆலோசனையில் ஈடுபட்டு வரும் OPS, கூட்டணி குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளார். NDA கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டத்திற்கு பின் முடிவு செய்யப்படும்.
