விருந்தாவனை சேர்ந்த பிரபலமான ஆன்மீகவாதி தான் பிரமானந்த மகாராஜ். இவர் நாட்டில் உள்ள பெண்களை அவமதிக்கும் வகையில் பேசி உள்ள ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பலருடைய கண்டனங்களையும் பெற்று வருகிறது. இது தொடர்பாக வெளியாகி உள்ள அந்த வீடியோவில் பேசியுள்ள அவர், இன்றைய காலத்தில் நூறு பெண்களில் இரண்டு முதல் நான்கு பெண்கள் மட்டுமே தூய்மையானவர்கள். மற்றவர்கள் எல்லாம் காதல், உடலுறவு தொடர்புகளில் ஈடுபட்டவர்கள் என்று அவர் கூறியுள்ள நிலையில் இந்த கருத்துக்கள் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதால் அவருக்கு எதிராக பலரும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் அந்த வீடியோவில் அவர் கூறுகையில், ஒரு இளைஞன் நான்கு பெண்களுடன் உறவில் இருந்தால் அவனுக்கு திருமணத்திற்கு பிறகு தன்னுடைய மனைவிக்கு உண்மையாக இருக்க முடியாது. அதனைப் போலவே ஒரு பெண் நான்கு ஆண்களுடன் உறவில் இருந்தால் அவளுக்கு தன்னை முழுமையாக ஒரே கணவருக்கு அர்ப்பணிக்க தைரியம் இருக்காது என்று அவர் பேசியுள்ளார். இவர் ஏற்கனவே பெண்களை அவமதிக்கும் வகையில் பல கருத்துக்களை தெரிவித்துள்ள நிலையில் தற்போது இவ்வாறு பேசி உள்ளது சமூக வலைத்தளங்களில் பல விமர்சனங்களை பெற்று வருகிறது.
📍Swami Premanand Ji Maharaj says, “Only 2 to 4 girls out of 100 are pure in today’s times.” pic.twitter.com/xAXuwVpraC
— Megh Updates 🚨™ (@MeghUpdates) July 29, 2025
