சாதிய அருவருப்பின் அட்டூழியம்… நெல்லை ஆணவப்படுகொலை குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் சாடல்..!!

By Soundarya on ஆடி 29, 2025

Spread the love

நெல்லையில் தன்னுடைய சகோதரியை காதலித்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை உதவி காவல் ஆய்வாளரின் மகன் வெட்டி கொலை செய்துவிட்டு காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்த  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இந்த சம்பவத்தில் குற்றவாளியின் பெற்றோர்கள் இருவரும் எஸ்ஐ ஆக இருந்த நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் இந்த ஆணவப்படுகொலைக்கு பல தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்து வரும் நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில், தூத்துக்குடி ஆணவ படுகொலையை நீளும் சாதிய அருவருப்பின் அட்டூழியம் என மாரி செல்வராஜ் சாடியுள்ளார். சாதிய பெருமைவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை அரசு இன்னும் துரிதமாகவும், கடுமையானதாகவும் நிச்சயம் செயல்படுத்தியே ஆக வேண்டும் என அவர் தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர், துணை முதல்வரை டேக் செய்து வலியுறுத்தியுள்ளார். வேறு சமூக பெண்ணிடம் பேசி பழகியதாக கவின் என்ற பட்டியலின இளைஞர் நேற்று படுகொலை செய்யப்பட்டார்