இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஜியோ நிறுவனத்திற்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். தங்கள் வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்றவாறு புதுப்புது ரீசார்ஜ் திட்டங்களை ஜியோ அறிமுகம் செய்து வருகின்றது. இப்படியான நிலையில் ஜியோ வில் வாடிக்கையாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு பிளானாக 29 ரூபாய்க்கு ரீசார்ஜ் உள்ளது.
இந்த திட்டமானது இரண்டு நாள் என்ற வேலிடிட்டியின் கீழ் 2GB டேட்டாவை வழங்கும். இரண்டு ஜிபி டேட்டா லிமிட் தீர்ந்த பின்னரும் 64kbps என்ற இன்டர்நெட் ஸ்பீடில் தொடர்ந்து அன்லிமிடெட் டேட்டாவை வழங்கும். இதன் மூலமாக whatsapp, UPI போன்ற மிதமான இணைய சேவைகளை பயன்படுத்த முடியும். ஏற்கனவே உள்ள ரீசார்ஜ் க்கு டாப் அப் செய்து இந்த திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.
