ரூ.450 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி. இதன் பிறகு தூத்துக்குடி மாவட்டத்தில் 4800 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதனை முடித்துவிட்டு இரவு 9:40 மணிக்கு தனி விமானம் மூலமாக திருச்சி செல்கிறார். நாளை மதியம் 12 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு செல்கிறார்.
அங்கு ராஜேந்திர சோழன் பிறந்த நாள் விழா தமிழக அரசு சார்பாக நடக்கிறது. இந்த விழா ஐந்து நாட்கள் நடக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார் .விழாவில் நான்காம் நாளான நாளை கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு செய்கிறார்.
