“கமல்ஹாசன் எனும் நான்” ராஜ்யசபாவில் தமிழில் ஒலித்த குரல்… மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்ற கமல்..!!

By Soundarya on ஆடி 25, 2025

Spread the love

நடிகரும், மநீம தலைவருமான கமல்ஹாசன் திமுக சார்பாக ராஜ்யசபா MP-யாக  பதவிப்பிரமாணம் ஏற்றார். இதனையடுத்து தமிழில் தனது முதல் குரலை நாடாளுமன்றத்தில் கமல்ஹாசன் பதிவு செய்தார். அவரைத் தொடர்ந்து திமுகவின் சல்மா, சிவலிங்கம் மற்றும் வில்சன் ஆகியோர் அடுத்தடுத்து தமிழ் மொழியில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்கள். மேலும் அதிமுக MP-க்கள் இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் வரும் திங்கள்கிழமை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மாநிலங்களவை எம்.பி-ஆக பதவியேற்ற மக்கள் நீதி மய்யம் தலைவரை வாழ்த்தி அவருடைய கட்சியினர் #கமலஹாசன்_என்னும்_ நான் என்ற ஹேஷ் டேக்கை டிரெண்ட் செய்து வருகிறார்கள்.