உத்திர பிரதேச மாநிலம் கோரக்பூர் பிஏசி பயிற்சி மையத்தில் கடந்த புதன்கிழமை அன்று காலை 600க்கும் மேற்பட்ட பெண் பயிற்சி கான்ஸ்டபிள்கள் மனிதாபிமானமற்ற நிலைமைகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது . அதாவது சிசிடிவி கேமராக்களின் கண்காணிப்பில் கீழ் தினமும் திறந்தவெளியில் குளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும், தண்ணீர் மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகள் மறுக்கப்பட்டதாகவும் அவர்கள் கண்ணீர் மல்க கூறியுள்ளார்கள். மேலும் தாங்கள் குளிக்கிற இடத்தில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது. ஏன் ஏற்பாடுகள் இல்லாமல் எங்களை அழைக்க வேண்டும்? என்று ஒரு பயிற்சியாளர் கூறியுள்ளார்.
30 புதிய பயிற்சியாளர்கள் ஒரே மின்விசிறி கொண்ட அறையில் அடைக்கப்பட்டதாகவும் 14 பேர் தகரக் கொட்டைகளில் இருந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளார்கள். மேலும் நாங்கள் ஒவ்வொரு நாளும் வழுக்கி விழுகிறோம். எங்களில் ஒருவருக்கு பல் உடைந்து விட்டது என்றும் கூறியுள்ளார். இந்த போராட்டம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து 7 மணி நேரம் புகார்கள் மற்றும் குளியல் அறையில் இருந்து கேமராக்களை அகற்றுவது உள்ளிட்ட உறுதிமொழிகளுக்கு பிறகு அந்த பெண்கள் பயிற்சிக்கு திரும்பி உள்ளார்கள்.
VIDEO | UP: Women trainee constables protest outside "26th Vahini PAC Gorakhpur’ demanding basic amenities at the centre.
(Source: Third Party)
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/JaOEeVC915— Press Trust of India (@PTI_News) July 23, 2025
