ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஆறுகள், வடிகால் மற்றும் அணைகள் நிரம்பி வழிகிறது. பல பகுதிகளில் பரவலாக நீர் தேங்கி சாலை வசதியும் துண்டிக்கப்பட்டுள்ளது. பல கிராமங்களில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் மக்கள் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளார்கள். ஒரு சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
வீடுகளுக்கு இரண்டு அடி வரை நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் ராஜஸ்தானின் ஜலாவரில் பெய்த கனமழையின் காரணமாக ஜலாவர் பிப்லோடி அரசு தொடக்கப் பள்ளியின் கூரை இடிந்து விழுந்துள்ளது. பிப்லோடி தொடக்கப் பள்ளியின் கூரை இடிந்து விழுந்ததில் பல குழந்தைகள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் குடித்த தகவல் கிடைத்ததும், அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தற்போது மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
VIDEO | Jhalawar, Rajasthan: Roof of Piplodi Primary School collapses, several children feared trapped. Rescue operations underway.#RajasthanNews #Jhalawar
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/K0STKQwP0A
— Press Trust of India (@PTI_News) July 25, 2025
