ஜூலை 23ஆம் தேதி அன்று லக்னோவின் கோமதி நகரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் தனக்கு தான் முதலில் பெட்ரோல் நிரப்ப வேண்டும் என்று வற்புறுத்திய பெண் ஒருவர் ஊழியர்களிடம் தவறாக நடந்து கொண்டது மட்டுமின்றி மற்ற ஓட்டுனர்களையும் செருப்பைக் காட்டி மிரட்டியுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அந்த பெண்ணை அடையாளம் கண்டு அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்கள். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது . அந்தவீடியோவில் கையில் செருப்போடு இருக்கும் அந்த பெண் பைக்கில் நிற்கும் இளைஞரிடம் சண்டையிட்டு வாகனத்தை நகர்த்துமாறு மிரட்டுகிறார்.
Kalesh at a filling station in Lucknow, Uttar Pradesh. pic.twitter.com/qYv7Ynpuqk
— Piyush Rai (@Benarasiyaa) July 24, 2025
அங்கிருந்து சிலர் அவரை தடுக்க முயன்ற போது அவர்களை திட்டினார். தான் தான் முதலில் பெட்ரோல் பங்கிற்கு வந்ததாகவும், தனக்கு தான் முதலில் காரில் பெட்ரோல் நிரப்ப வேண்டும் என்று அந்த பெண் கூறியுள்ளார். மேலும் அந்த இளைஞர் அந்த பெண்ணிடம் நீ முன்பு வந்த போது எங்கே இருந்தாய்? என்று கேட்கிறார் மேலும் அந்தப் பெண் குடிபோதையில் இருந்ததாகவும் எந்த காரணமும் இல்லாமல் ஊழியர்களிடமும், மற்ற ஓட்டுனர்களிடமும் அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
