வளர்ச்சின்னா இப்படி இருக்கணும்..! 40 வயதில் பல கோடிகளில் சொத்து வைத்திருக்கும் காமெடி நடிகர் யோகி பாபு… அடேங்கப்பா இவ்வளவா..?

By Soundarya on ஆடி 22, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் முக்கியமான காமெடியன்களில் ஒருவர்தான் யோகி பாபு. நயன்தாராவுக்கு ஜோடியாக கோலமாவு கோகிலா படத்தில் நடித்த முதல் காமெடி நடிகராக வலம் வருகிறார். தற்போது விஜய், அஜித், ஆகிய முன்னணி  நடிகர்களின் படங்களிலும் காமெடியனாக நடித்து வருகிறார். அது மட்டுமின்றி ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

இவர் கைவசம் தற்போது மெடிக்கல் மிராக்கிள், ராஜா சாப், ஜெயிலர் 2 உள்ளிட்ட பல படங்கள் உள்ளது. இந்நிலையில் யோகி பாபு இன்று தன்னுடைய நாற்பதாவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நாளில் அவருடைய சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் யோகி பாபு ஒரு நாளைக்கு 15 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்றும் அவருடைய மொத்த சொத்து மதிப்பு 75 கோடி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.