தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு பண்டிகை நாட்கள் மற்றும் முக்கிய நாட்களில் அரசு சார்பில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு வருகின்ற ஜூலை 28ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடுசெய்ய ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி வேலை நாளாக இருக்கும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
அதனைப் போலவே அரியலூர் மாவட்டத்திற்கு ஜூலை 23ஆம் தேதியும், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஜூலை 24-ஆம் தேதியும், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஜூலை 28ஆம் தேதியும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்றைய நாளில் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் என எதுவும் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
