மனசே சரியில்ல..! முதல்வருக்கு நிறைய மன உளைச்சல் இருக்கு… எல்லாத்துக்கும் அவங்க தான் காரணம்… வீடியோ வெளியிட்ட நடிகர் தாடி பாலாஜி..!!!

By Soundarya on ஆடி 22, 2025

Spread the love

முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு நேற்று லேசான தலைசுற்றல் ஏற்பட்டதன் காரணமாக ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை அடுத்து இன்று காலை 7 மணி அளவில் அருகில் உள்ள தேனாம்பேட்டை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று அங்கு சில மருத்துவ பரிசோதனைகள் நடந்தது. இந்த நிலையில்  கட்சி நிர்வாகிகளின் பேச்சால் தான் முதலமைச்சருக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக நடிகர் தாடி பாலாஜி வீடியோ  வெளியிட்டுள்ளார் .,அதில், “நேற்று கேள்விப்பட்ட ஒரு செய்தியால் மனது சரியில்லை. அது என்னவென்றால் நம்முடைய முதல்வர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பதுதான். முதல்வர் கூடிய விரைவில்   குணமாகி வீட்டிற்கு வந்து விடுவார். என்னுடைய பிரார்த்தனை எப்போதும் இருக்கும்.

அதுபோல அண்ணியின் பிரார்த்தனை நம்முடைய முதலமைச்சரை குணப்படுத்தி வீட்டிற்கு கொண்டு சென்று விடும். முதலமைச்சர் ஒரு நிகழ்வில் பேசும்பொழுது, காலையில் நான் கண்விழித்து எழுந்திருக்கும் பொழுது நம்மவர்கள் யாராவது எதையாவது பண்ணிவிடக் கூடாது என்று எழுந்திருக்கிறேன் என்று சொன்னார். அப்போ அவருக்கு எவ்வளவு மன உளைச்சல் இருக்கு என்று பாருங்க. இதுல கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் எல்லாரும் செய்கின்ற செயல்கள்.

   

நீங்கள் பேசும் வார்த்தைகள் இவையெல்லாம் உங்களை பாதிக்கிறதோ இல்லையோ தலைவரை போய் பாதிக்கும். நம்ம முதலமைச்சர் நாம்தான் பொறுப்பாக பார்த்துக் கொள்ள வேண்டிய கடமை எங்களை விட உங்களுக்கு அதிகமாக இருக்கிறது. நான் சொல்கிறது இந்த கட்சிக்கு மட்டும் அல்ல. எல்லா கட்சிக்கும் தான்” என்று கூறியுள்ளார்.