BREAKING: தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்.. அரசு புதிய அதிரடி உத்தரவு..!

By Nanthini on ஆடி 20, 2025

Spread the love

தமிழக அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் பலரும் பயனடைந்து வருகிறார்கள். குறிப்பாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நிதி உதவி உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இப்படியான நிலையில் பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் கட்டாயம் என்று அரசு அறிவித்துள்ளது.

ஆதார் அங்கீகாரம் பெரும்போதே விரல் ரேகை பதிவில் சிக்கல் ஏற்பட்டால் முகத்தை ஸ்கேன் செய்வதன் மூலம் அங்கீகாரம் பெறலாம். ஆதார் எண் கிடைக்காத பட்சத்தில் கடவுச்சீட்டு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை வழங்கலாம் எனவும் அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.