தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் தேர்தல் களம் தற்போதே சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி தான் அமைய வேண்டும் என்பதில் ஸ்டாலின் உறுதியாக உள்ள நிலையில் அதற்கான வேலைகளில் மும்முரம் காட்டி வருகின்றார். மறுபக்கம் இந்த முறை எப்படியாவது அதிமுக ஆட்சியை அமைத்து விட வேண்டும் என்று இபிஎஸ் செயல்பட்டு கொண்டிருக்கின்றார். பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ள நிலையில் கூட்டணி ஆட்சிதான் தமிழகத்தில் அமையும் என பாஜக கூறிக் கொண்டிருக்க தான்தான் முதல்வர் வேட்பாளர் என இபிஎஸ் ஒரு பக்கம் கூறிக் கொண்டிருக்கின்றார்.

மீண்டும் அதிமுக ஆட்சியை நிலைநாட்ட இபிஎஸ் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் அதிமுகவில் அடுத்தடுத்து நிர்வாகிகளை கட்சி பொறுப்புகளில் இருந்து இபிஎஸ் நீக்கி வருகிறார். இப்படியான நிலையில் கூட்டணி கட்சிகள் குறித்து அதிமுக மத்தியில் குழப்பம் நிலவிவரும் நிலையில் கடந்த பத்து ஆண்டுகளாக அதிமுக கூட்டணியில் இருந்த ஜனநாயக முஸ்லிம் மக்கள் கட்சியை அந்த கூட்டணியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இணைந்ததால் தாங்கள் விலகுவதாக கட்சியின் தலைவர் தமீம் அறிவித்துள்ளார். மேலும் 2026 தேர்தலில் தங்கள் கூட்டணி வெல்லும் எனவும் விஜய் முதல்வராவது உறுதி என்றும் சூளுரைத்தார். இது தமிழக அரசியல் களத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
