தமிழக அரசுப் பேருந்தில் AC வேலை செய்யவில்லை… அதிகாரிகள் நஷ்ட ஈடாக ரூ.35,000 செலுத்த அதிரடி உத்தரவு..!!

By Soundarya on ஆடி 18, 2025

Spread the love

கடந்தாண்டு ஏப்ரல் 1ம் தேதி  ராஜேஷ் என்பவர் மதுரையில் இருந்து நெல்லைக்கு AC பேருந்தில் ரூ.190 கட்டணமாக கொடுத்துச் சென்றுள்ளார்.  அப்போது பேருந்தில் AC வேலை செய்யாமல் இருந்ததால் பயணிகள் பலரும் அவதியடைந்துள்ளனர்.  போக்குவரத்துக் கழக அதிகாரியிடம் புகார் அளித்த போதிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ராஜேஷ் நெல்லை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்.

இதனையடுத்து இந்த வழக்கில் நஷ்ட ஈடாக ரூ.25,000, வழக்குச் செலவு ரூ.10,000 என மொத்தம் ரூ.35,000-ஐ ஒரு மாதத்திற்குள், நெல்லை மண்டல போக்குவரத்துக் கழக பொது மேலாளர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆகியோர் தங்களது சொந்தப் பணத்தினை கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.