இதுதான் வெற்றி..! தான் படித்த பள்ளியிலேயே ஹெட் மாஸ்டர் ஆன பழங்குடியின பெண்… குவியும் பாராட்டுக்கள்..!!

By Soundarya on ஆடி 17, 2025

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் களியல் அருகே பேணு பகுதியை சேர்ந்தவர் ஷீலா. இவர் அரசு உண்டு உறைவிட பள்ளியில் மாணவியர் விடுதியில் தங்கி பள்ளி படிப்பை முடித்துள்ளார். பிறகு ஆசிரியர் பயிற்சி முடித்து வட்டப்பாறை தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்துள்ளார். தற்போது அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றுள்ளார்.

இவருக்கு மது என்ற கணவரும், சபரீஷ், சக்திவேல் என்று இரண்டு மகன்களும் உள்ளார்கள். மது ரப்பர் பால் வெட்டும் வேலைக்கு சென்று வருகிறார் . சபரீஷ் பன்னிரண்டாம் வகுப்பு சக்திவேல் ஒன்பதாம் வகுப்பம்  படிக்கிறார்கள். இந்த நிலையில் தான் படித்த பள்ளியிலேயே தலைமை ஆசிரியராக பழங்குடியினப் பெண் ஷீலா பொறுப்பேற்ற சம்பவத்திற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.