பிரபல திரைப்பட இயக்குனர் வேலு.பிரபாகரன் உடல்நலக்குறைவால் காலமானார்… சோகத்தில் திரையுலகினர்..!!

By Soundarya on ஆடி 17, 2025

Spread the love

பிரபல திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன்(68) உடல் நலக்குறைவின் காரணமாக சென்னையில் உள்ள தரணியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது காலமானார். அவருடைய உடலை மோசமடைந்ததால் அவருக்கு வெண்டிலேட்டர் உதவியோடு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவருடைய உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாமல் இருந்த நிலையில் தற்போது காலமாகியுள்ளார்.

வேலு பிரபாகரன் ஒளிப்பதிவாளராக தன்னுடைய திரையுலக பயணத்தை தொடங்கினார். இயக்குனர், நடிகர் என  பன்முகத்தன்மைகளை கொண்டவர்.  நாளைய மனிதன் என்ற படத்தின் மூலமாக முதன்முதலில்  இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு அசுரன், ராஜாளி, கடவுள், சிவன், புரட்சிக்காரன் என பல படங்களை இயக்கியிருக்கிறார். இவருடைய மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.