தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பிடிபட்ட வழக்கில் சிபிசிஐடி பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. அதாவது தேர்தலின் போது பணப்பட்டுவாடா செய்ய நயினார் நாகேந்திரனுக்கு பாஜக நிர்வாகிகள் எஸ்ஆர் சேகர், கேசவ விநாயகம், கோவர்தன் ஆகியோர் உதவியது உறுதியாகியுள்ளது. கோவர்தனின் ஓட்டுநர் மூலமாக ஒன்றரரை கிலோ தங்கத்திற்கு பதிலாக ரூபாய் 97.92 லட்சம் பணத்தை கைமாற்ற ஹவாலா உதவியது கால் டேட்டா ரெக்கார்ட் மூலம் உறுதியாகி உள்ளது.
