இன்ஸ்டாகிராம் நண்பரை வீட்டுக்கு வரவழைத்த மாணவி.. கதவைத் திறந்த போது காத்திருந்து அதிர்ச்சி.. நொடி பொழுதில் அரங்கேறிய சம்பவம்..!

By Nanthini on ஆடி 17, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் பள்ளி மாணவர்கள் முதல் அனைத்து தரப்பினரும் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால் அவர்களுடைய படிப்பு மட்டுமல்லாமல் வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. அதேசமயம் தவறானவர்களுடன் ஏற்படும் நட்பு பெரும் விபரீதத்தையும் ஏற்படுத்துகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் உத்திரபிரதேசம் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம் காஜியாபாத் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோருடன் வசித்து வரக்கூடிய சிறுமி ஒருவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகின்றார்.

அவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் பல்லி விடுமுறை நாளில் வீட்டிலிருந்த மாணவி தனது வீட்டுக்கு வருமாறு இன்ஸ்டாகிராம் நண்பருக்கு அழைப்பு விடுத்துள்ளார். அப்போது மாணவியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டின் கதவு தட்டப்பட்டது. தனது நண்பன் வந்து விட்டான் என்ற ஆர்வத்தில் கதவை திறந்த மாணவிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டு வாசலில் மாணவியின் நண்பனுடன் மேலும் 3 சிறுவர்கள் நின்று கொண்டிருந்த நிலையில் அவர்கள் நான்கு பேரும் வீட்டுக்குள் புகுந்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

   

அந்த சமயத்தில் வெளியே சென்று இருந்த மாணவியின் தாய் வீடு திரும்பிய நிலையில் வீட்டுக்குள் மகள் இருந்த நிலையை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக தன் மகளை வெளியே இழுத்து வந்தார். பிறகு அந்த நான்கு சிறுவர்களையும் அதே அறையில் பூட்டிவிட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சிறுவர்களை கைது செய்தனர். பலாத்காரத்தில் ஈடுபட்ட நான்கு பேரில் மூன்று பேர் மாணவியுடன் படிக்கும் மாணவர்கள் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ள நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.