தனது குழந்தைகளோடு குகையில் வாழ்ந்த ரஷ்ய பெண்… 15 வருடங்களாக இப்படித்தான்… அதிர்ச்சியில் உறைந்த போலீசார்..!!

By Soundarya on ஆடி 16, 2025

Spread the love

கர்நாடகா கொகர்னா வனபகுதியில் இருந்து மலைப்பகுதியில் ரஷ்ய பெண் ஒருவர் தன்னுடைய இரண்டு பெண் குழந்தைகளோடு வசித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அங்கு சென்று அப்போது அங்கிருந்த குகைக்குள் சென்று பார்த்தபோது குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருந்தது. மற்றொரு குழந்தையும் அதன் தாயாரும் பக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களை எழுப்பி விசாரித்ததில் அந்த பெண்ணின் பெயர் நினா குதினா. 40 வயதான அவர் ரஷ்யாவை சேர்ந்தவர். 2017 ஆம் வருடம் இந்தியாவிற்கு வந்துள்ளார்.

அதன் பிறகு விசா காலாவதியான பிறகும் தொடர்ந்து இந்தியாவிலேயே வசித்து வந்துள்ளார். குகைக்குள் பிளாஸ்டிக் சீட்டை விரித்து அதில் படுத்து உறங்கி உள்ளார்கள். தேவையான உணவுப் பொருட்களை அருகில் உள்ள கிராமத்திற்கு சென்று வாங்கி வந்துள்ளார். அப்படி செல்லும்போது செல்போனுக்கு சார்ஜிங் செய்து வந்துள்ளார். மேலும் குகையில் இருந்து கொண்டு யோகா, தியானம் போன்ற ஆன்மீக காரியங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 15 வருடங்களாக ரஷ்யாவில் வசிக்காமல் உலகம் முழுவதும் சுற்றிக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார் . தற்பொழுது அவர்கள் மூன்று பேரும் மீட்கப்பட்டு பெண்கள் முகாம் ஒன்றில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.