இன்றைய காலகட்டத்தில் தினம்தோறும் பாலியல் வன்கொடுமை குறித்த செய்திகள் தான் அதிகளவு இணையத்தில் வந்து கொண்டிருக்கிறது. எந்தப் பக்கம் திரும்பினாலும் ஆறு வயது குழந்தை முதல் 60 வயது பாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இதற்கு எதிராக அரசு என்னதான் கடுமையான சட்டங்களை கொண்டு வந்தாலும் சில காமக்கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இப்படியான நிலையில் உத்தரபிரதேச மாநிலம் குஷாம்பி மாவட்டம் ஹெராஜ் என்ற கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுமி நேற்று மாலை கிராமத்தில் உள்ள தோட்டத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது அதே கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் மிட்டாய் வாங்கி தருவதாக கூறி சிறுமியை யாரும் இல்லாத வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளான். அங்கு வைத்து சிறுமியை கதற கதற பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். வீடு திரும்பிய சிறுமி தனக்கு நடந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனே போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமுறைவாக உள்ள அந்த சிறுவனை தேடி வருகிறார்கள். ஒன்பது வயது சிறுமியை 14 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
