தமிழகத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்… இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கப்போகுது..!

By Nanthini on ஆடி 15, 2025

Spread the love

வங்க கடலில் நேற்று முன்தினம் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறிய நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்குவங்க பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழையும் சில மாவட்டங்களில் மிதமான மலைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும் என்று ஆரஞ்சு அலெர்ட் விடுத்துள்ளது. ஜூலை 17ஆம் தேதி தேனி திண்டுக்கல், தென்காசி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் 18ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் கன மழை பெய்யக்கூடும். தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச கூடும் எனவும் எச்சரித்துள்ளது