குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த கொடூர விபத்தில் மொத்தம் 241 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தற்போது விளையாட விசாரணை அறிக்கையின்படி ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட 32 நொடிகளில் 2 என்ஜின்களும் நின்று போனது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
என்றன்களுக்கு எரிபொருள் செல்வது தடைப்பட்டதால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் விமானிகள் பேசிக்கொண்ட குரல் பதிவு மூலம் தெரிய வந்துள்ளது. ஏன் எரிபொருள் துண்டிக்கப்பட்டது என்று ஒரு விமானி கேட்க அதற்கு நான் அல்ல என்று மற்றொரு விமானி பதிலளித்துள்ளார். கருப்பு பெட்டி மூலம் இந்த தகவல்கள் தற்போது கசிந்துள்ள நிலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
