“உங்க அம்மாவுக்கு வயசாயிருச்சு, நீ என்கூட வா”.. பெற்ற மகளையே படுக்கைக்கு அழைத்த தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

By Nanthini on ஆடி 9, 2025

Spread the love

புதுச்சேரியில் 50 வயது நபர் ஒருவர் திருமணத்திற்கு பிறகு கடந்த 20 ஆண்டுகளாக நீலகிரி மாவட்டம் ஊட்டியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அவர் கட்டிட தொழிலாளியாகவும் 45 வயதான அவருடைய மனைவி காட்டேஜிலும் பணியாற்றி வந்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு 17 வயதாகிறது. இரண்டு மகன்களும் பள்ளியில் படித்து வருகிறார்கள். இளைய மகளுக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெற்றோர் வேலைக்கு செல்வதால் 17 வயது சிறுமி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தன்னுடைய தங்கையை வீட்டில் இருந்து கவனித்து வருகின்றார்.

இப்படியான நிலையில் தொழிலாளியின் மனைவிக்கு அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வந்துள்ளது. வேலை முடிந்து ஆசையுடன் வீட்டுக்கு வரும் தொழிலாளி தன்னுடைய மனைவியை தாம்பத்தியத்திற்கு அழைத்ததாக தெரிகின்றது. வயது மற்றும் உடல்நிலை காரணம் காட்டி சில நாட்களாக அவருடைய மனைவி மறுப்பு தெரிவித்துள்ளார். இப்படியான நிலையில் சம்பவத்தன்று பணி முடிந்து வீட்டுக்கு வந்த தொழிலாளி ஊட்டி குளிர் என்னை வாட்டி வதைக்கிறது, என்னால் குளிர் தாங்க முடியவில்லை என்று கூறி தனது மூத்த மகளிடம் சென்று உன் தாய்க்கு வயதாகி விட்டதால் என்னுடன் தாம்பத்தியத்திற்கு வர முடியவில்லை என்று கூறி சிறுமியை பாலியல் உறவுக்கு அழைத்துள்ளார்.

   

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி உடனே கண்ணீர் விட்டு அழுதபடி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அந்த தொழிலாளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.