கடலூர் செம்மங்குப்பம் பகுதியில் ரயில்வே கேட்டில் தனியார் பள்ளி வாகனத்தின் மீது திருச்செந்தூரிலிருந்து சென்னை நோக்கி சென்ற ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மூன்று பள்ளி மாணவர்கள் உயிரிழந்தார்கள். மேலும் ஓட்டுனர் உட்பட ஆறு பேர் படுகாயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இதனையடுத்து விபத்துக்கு காரணம் வேன் ஒட்டுநர் காரணம் என்றும், பள்ளிக்கு சீக்கிரம் செல்ல வேண்டும் என்று வேன் ஓட்டுநர் வற்புறுத்தி கேட்டுக் கொண்டதால் ரயில்வே கேட்டை கேட் கீப்பர் திறந்துள்ளார். பாதுகாப்பு விதிகளுக்கு புறம்பாக கேட் திறந்தது தான் இந்த விபத்து நடந்ததாக ரயில்வே விளக்கம் அளித்திருந்தது.
இந்நிலையில் இந்த விபத்து குறித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வேன் ஓட்டுநர் சங்கர் விளக்கம் அளித்துள்ளார் . அதில் நான் போகும் போதே ரயில்வே கேட் திறந்துதான் இருந்தது. கேட்டை மூட வேண்டாம் என்று நான் சொல்லவே இல்லை. ரயில் ஹாரன் சத்தம் கூட அடிக்கவில்லை. கேட் கீப்பரும் அந்த இடத்தில் இல்லை என்று அதிர்ச்சி தகவலை கூறி இருக்கிறார்.
