கடலூர் செம்மங்குப்பம் பகுதியில் ரயில்வே கேட்டில் தனியார் பள்ளி வாகனத்தின் மீது திருச்செந்தூரிலிருந்து சென்னை நோக்கி சென்ற ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மூன்று பள்ளி மாணவர்கள் உயிரிழந்தார்கள். மேலும் ஓட்டுனர் உட்பட ஆறு பேர் படுகாயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த விபத்திற்கு காரணம் கேட் கீப்பரின் அலட்சியம் தான் என்று குற்றம் சாட்டிய பொதுமக்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனையடுத்து கேட் கீப்பர் பஞ்சஜ் சர்மாவை இடைநீக்கம் செய்து தெற்கு ரயில்வே உத்தரவு பிறப்பித்து. தற்போது அவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பள்ளிக்கு சீக்கிரம் செல்ல வேண்டும் என்று வேன் ஓட்டுநர் வற்புறுத்தி கேட்டுக் கொண்டதால் ரயில்வே கேட்டை கேட் கீப்பர் திறந்துள்ளார். பாதுகாப்பு விதிகளுக்கு புறம்பாக கேட் திறந்தது தான் இந்த விபத்து நடந்ததாக ரயில்வே விளக்கம் அளித்தது. மேலும் ரயில் வரும் நேரம் தெரிந்தும் கேட் மூடாமல் அலட்சியமாக இருந்தது எப்படி? என பல்வேறு கேள்விகள் எழுந்து வருகிறது. இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஐந்து லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது .மேலும் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களும் நிவாரணம் அளித்துள்ளார். இந்த நிலையில் இந்த விபத்துக்கு பிறகு அங்கு சிதறி கிடக்கும் மாணவர்களுடைய பொருள்களின் புகைப்படங்கள் வெளியாகி கண்களில் கண்ணீர் வரவழைக்கிறது.
