தனது அம்மாவுக்கு நண்பனையே திருமணம் செய்து வைத்த மகன்… இத்தனை வயது வித்தியாசத்தில்.. என்ன காரணம்..??

By Soundarya on ஆடி 7, 2025

Spread the love

சீனாவில் வசித்து வருபவர் சிஸ்டர் ஜின். 50 வயதான இவர் தொழில் முனைவோராக உள்ளார். இவருக்கு திருமணம் ஆகி 20 வயதில் கைகாய் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து விட்டார் ஜென்.  இவருடைய மகன் கைகாய் உடன் ரஷ்யாவைச் சேர்ந்த டெபு என்பவர் படித்து வருகிறார். இந்நிலையில் ஒருநாள் கைகாய் தனது நண்பர்கள் மூன்று பேரை வீட்டிற்கு அழைத்து சென்று அங்கு விருந்து வழங்கியிருக்கிறார்.

அப்போது ஜின் மற்றும் டெபு ஆகியோரிடையே காதல் மலர்ந்துள்ளது. டெபு   ஒரு வாரம் அங்கேயே தங்கியுள்ளார். இதனை தொடர்ந்து இதை அறிந்த மகன் கைகாய் இருவருடைய திருமணத்திற்கும் ஆதரவு தெரிவித்துள்ளார் .அதன்படி திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். பிறகு மூன்று பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்கள். இந்த நிலையில் தான் ஜின் கர்ப்பமாக உள்ளதாக சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார் .அதில் தனக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் முப்பது வயதில் அவரை பிரிந்தேன். பின் மகனின் வகுப்புத் தோழருடன் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொண்டோம் இப்போது கர்ப்பமாக உள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.