அவங்க ஹோல்சேல் டீலர்.. நீங்கள் சப் டீலரா.? கூட்டணி குறித்த கேள்விக்கு ஒரே போடாய் போட்ட சீமான்..!!

By Soundarya on ஆடி 7, 2025

Spread the love

சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தோடு கூட்டணியா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ” கொள்கையில் பெரிய தூரம் உள்ளது. நீங்கள் பெரியாரைக் கொள்கை வழிகாட்டி என்று சொல்கிறீர்கள். நாங்கள் அயோத்திதாசர், ரெட்டமலை சீனிவாசன் ஆகியோரே நாங்கள் வழிகாட்டியாக கொண்டு இருக்கிறோம். உங்கள் கொள்கைக்கும் எங்கள் கொள்கைக்கும் ஓராயிரம் கிலோமீட்டர் இடைவெளி உள்ளது.

எந்த கொள்கையில் பெரியாரை ஏற்கிறீர்கள்? என்று கேட்டால் அதை விளக்கி சொல்ல வேண்டும். தமிழை சனியன் என்று சொன்னதை இவர்கள் ஏற்கிறார்களா? தமிழை காட்டுமிராண்டி மொழி என சொன்னதையும், தமிழ் படித்தால் எதற்கும் உதவாது பிச்சை எடுக்க கூட லாயக்கில்லை என்று சொன்னதையும், தமிழ் சனியனை விட்டு ஒளியுங்கள் என்று சொன்னதையும் இவர்கள் ஏற்கிறார்களா? அதிமுக பாஜக உடன்  கூட்டணி என்றால் அதில் இணைந்து விடலாமே. தனித்த கட்சி எதற்கு? அவங்க ஹோல்சேல் டீலர். நீங்கள் சப் டீலரா? நாங்கள் அரசியல் விடுதலைக்கு நிற்கிறோம். அரசியல் வியாபாரம் செய்ய வரவில்லை. இரண்டுக்கும் ரொம்ப தூரம்” என்று பேசி உள்ளார்