ஒரே இடத்தில் பல மணி நேரம் நின்ற ரிதன்யாவின் கார்.. தற்கொலைக்கு முன்பு நடந்தது என்ன?.. வெளிவந்த திடுக்கிடும் தகவல்..!

By Nanthini on ஆடி 7, 2025

Spread the love

திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அடுத்தடுத்து பல உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. ரிதன்யாவுக்கும் கவினுக்கும் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடந்த நிலையில் ரிதன்யாவின் பெற்றோர் 300 சவரன் நகை மற்றும் 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். திருமணம் ஆகி முதல் இரண்டு வாரங்கள் அமைதியாக இருந்ததாகவும் மூன்றாவது வாரத்தில் இருந்து வாக்குவாதங்கள் தொடங்கியதாகவும் ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் இரு வீட்டருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பிறகு ரிதன்யா தனது தாய் வீட்டுக்கு சென்ற நிலையில் 20 நாட்களுக்குப் பிறகு கவின் அவரை மீண்டும் தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அதன் பிறகு அங்கு அவரை மீண்டும் கொடுமைப்படுத்த தொடங்கிய நிலையில் இதையெல்லாம் தாங்கிக்கொள்ள முடியாத ரிதன்யா தனது பெற்றோருக்கு கதறி அழுதபடி ஒரு ஆடியோவை அனுப்பி விட்டு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இப்படியான நிலையில் ரிதன்யா தற்கொலை விவகாரத்தில் மேலும் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

   

அதாவது அவிநாசி டூ அன்னூர் சாலையில் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட அன்றைய நாள் காலை 11 மணி அளவில் அந்த சாலையில் சென்றுள்ளார். அங்கு அருகில் இருந்த ஒரு வீட்டில் சிசிடிவி காட்சிகளை பார்க்கும்போது அந்த சாலையில் ரிதன்யா சுமார் முக்கால் மணி நேரத்திற்கு மேலாக காரை நிறுத்தி உள்ளேயே இருந்துள்ளார். அந்த இடத்திற்கு வருவதற்கு முன்பே ரிதன்யா லட்சுமி ராமகிருஷ்ணா கோவிலுக்கு சென்று கண்ணீர் மல்க சாமியை தரிசனம் செய்துள்ளார். அதனை அங்கிருந்த பலரும் கவனித்துள்ளனர். அதன் பிறகு தான் காரை எடுத்துக் கொண்டு ரிதன்யா அன்னூர் அவிநாசி சாலையில் சென்றுள்ளார். அந்த சாலையில் தான் ஒரு மரத்தின் அடியில் காரை நிறுத்திவிட்டு தன்னுடைய அப்பா அம்மாவிற்கு அழுதபடி ஆடியோவை அனுப்பியதாகவும் சொல்லப்படுகிறது.

   

அதுமட்டுமல்லாமல் தற்கொலை செய்வதற்கு முன்பு ரிதன்யா கடைசியாக யாரிடமோ போன் பேசி உள்ளார். ஆனால் அது யார் என்று சரியாக தெரியவில்லை. ரிதன்யா காரில் அழுதபடி போன் பேசிக் கொண்டிருந்ததை அந்த வழியாக சென்ற பலரும் பார்த்துள்ளனர். பிறகு ஒண்டி பிள்ளையார் கோவிலுக்கு செல்லும் வழியில் தான் ரிதன்யா காரில் வாயில் நுரை தள்ளி கிடந்துள்ளார். இதை வைத்து பார்க்கும் போது சாலையோரமாக நின்று கொண்டிருக்கும்போதே விஷம் அருந்திவிட்டு பிறகு அப்பா அம்மாவுக்கு அவர் ஆடியோ அனுப்பி இருக்கலாம் என்று தெரிகிறது. அங்கிருந்த சிசிடிவி காட்சியில் ரிதன்யா பல மணி நேரம் அந்த காரில் அங்கு இருந்தது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. பிறகு கோவிலுக்கு செல்லலாம் என்று புறப்பட்ட நிலையில் செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்துள்ளது. ஆனால் ரிதன்யா தன்னுடைய அம்மாவிடம் இறுதியாக போன் பேசும்போது தான் கோவிலில் இருப்பதாக பொய் கூறியுள்ளார். ஏதோ அம்மாவிடம் பேசலாம் என்ற எண்ணத்தில் தான் அவர் அவ்வாறு கூறியிருக்கலாம் என தெரிகிறது. போலீஸ் விசாரணையில் இன்னும் சில தகவல்கள் சிக்காத நிலையில் பல சிசிடிவி காட்சிகளை ஆராயும் போது உண்மையிலேயே ரிதன்யாவுக்கு என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளலாம் என கூறப்படுகிறது.