வீட்டில் ஈ, எறும்பு, கரப்பான் பூச்சி தொல்லை இருக்கா?.. வீடு துடைக்கும் தண்ணீரில் இந்த இரண்டு பொருளை மட்டும் சேர்த்தால் போதும்..!

By Nanthini on ஆடி 4, 2025

Spread the love

பொதுவாகவே நாம் வீட்டை என்னதான் சுத்தமாக வைத்திருந்தாலும் வெயில் காலம் மற்றும் கோடை காலங்களில் எறும்புகள், கொசுக்கள் மற்றும் ஈக்கள் போன்ற பூச்சிகள் வீட்டிற்குள் வர தொடங்கி விடும். சமையலறை மற்றும் குளியலறையின் வடிகால் வழியாக வீட்டுக்குள் நுழையும். மேலும் கொசுக்கள் பெருகும் அபாயமும் அதிகம் ஏற்படும். கொசு கடித்தால் அதிக நோய்கள் பரவும். இப்படியான சூழலில் வீட்டை தினமும் சுத்தம் செய்வது முக்கியம். பொதுவாக நம்மில் பெரும்பாலானோர் வீடு துடைக்க கடைகளில் விற்கப்படும் ரசாயனங்கள் கலந்த சுத்தம் செய்யும் திரவத்தை பயன்படுத்துகிறோம்.

இது சுத்தம் செய்ய மட்டுமே உதவுமே தவிர ஈ, எறும்பு மற்றும் கரப்பான் பூச்சி போன்றவை உங்கள் வீட்டுக்குள் வருவதை தடை செய்யாது. இதற்கு உங்கள் வீட்டில் இருக்கும் எளிய பொருள்களை பயன்படுத்தி வீட்டை சுத்தம் செய்தால் போதுமானது. அதற்கு வீட்டை சுத்தம் செய்யும் தண்ணீரில் சிறிது படிகாரத்தை சேர்க்க வேண்டும். இதை செய்வதன் மூலம் கொசுக்கள், ஈக்கள், எறும்புகள் ஓடிவிடும். படிகாரம் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதால் பூச்சிக்கொல்லியாக செயல்படும். அடுத்து எலுமிச்சைச்சாற்றை எடுத்து நீங்கள் வீடு துடைக்கும் தண்ணீரில் கலந்து வீட்டை துடைத்தால் வீடு சுத்தமாக மாறுவது மட்டுமல்லாமல் பூச்சிகள் வருவது தடுக்கப்படும். எலுமிச்சை எறும்புகள், ஈக்கள் மற்றும் பிற சிறிய பூச்சிகளை விரட்டியடிக்கும். படிகாரம் மற்றும் எலுமிச்சையை தண்ணீரில் கலந்து கரப்பான் பூச்சிகள் மற்றும் எறும்பு இருக்கும் இடங்களில் தெளித்துவிட்டால் அவை அந்த பக்கம் வராது.