இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா..? இந்த நடிகைக்கு கோலிவுட்டில் இப்போ மவுசு அதிகம்..!!!

By Soundarya on ஆடி 1, 2025

Spread the love

நடிகர் நடிகைகளுடைய குழந்தை பருவ புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது உண்டு. ஆனால் அவர்கள் யார் என்பது கண்டுபிடிப்பது மிகவும் கடினமாகிவிடும். அப்படி ஒரு போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த நடிகை வேறு யாருமில்லை நடிகை திவ்யபாரதி. பேச்சுலர், மகாராஜா, கிங்ஸ்டன் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். பேச்சுலர் படம் தான் இவருக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று தந்தது. குறுகிய காலத்திலும் சரி தமிழில் இவர் நடித்த படங்களின் எண்ணிக்கையிலும் சரி இவ்வளவு ரசிகர்கள் பட்டாளத்தை ஈர்த்துள்ளார் என்றால் அது பலருக்கும் ஆச்சரியம்தான்.

   

மாடலிங் துறையில் இருந்தது திவ்யபாரதி அதன் பிறகு சினிமா உலகில் கால் பதித்தார். தமிழில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பல நடிகைகளை கூட இன்ஸ்டாகிராமில் இவ்வளவு ரசிகர்கள் பின் தொடர்வது இல்லை. ஆனால் திவ்யபாரதிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களிலும் திவ்யபாரதி நடித்து வருகின்றார்.  இவர் தன்னுடைய சிறுவயதில் தனது அம்மாவோடு எடுத்த புகைப்படத்தை அதோடு தற்போது எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.