இந்தியாவைப் பொறுத்த வரையில் தினம்தோறும் ஏராளமான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு சிறப்பு சலுகைகள் மற்றும் அறிவிப்புகள் அடிக்கடி வெளியிடப்பட்டு வந்தாலும் ரயில் கட்டணமும் அவ்வப்போது உயர்த்தப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் வருகின்ற ஜூலை 1 முதல் ரயில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி இரண்டாம் வகுப்பு இருக்கை, படுக்கை வசதி, முதல் வகுப்பு (சாதாரண) ரயில்களில் கிலோமீட்டருக்கு அரை பைசாவும், விரைவு ரயில்களில் ஒரு பைசாவும் பயண கட்டணம் உயர்த்தப்படுகிறது. மேலும் அனைத்து ஏசி வகுப்புகளுக்கும் கிலோ மீட்டருக்கு இரண்டு பைசா உயர்த்தப்படுகின்றது. இந்த புதிய கட்டண முறை தேஜஸ், வந்தே பாரத், ராஜ்தானி, சதாப்தி உள்ளிட்ட அனைத்து ரயில்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை ரயில் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
