ஜீவாவின் SMS பட நடிகையா இது?… ஆள் அடையாளம் தெரியாம இப்படி மாறிட்டாங்களே… வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ..!

By Nanthini on ஆனி 28, 2025

Spread the love

நடிகை அனுயா பகவத் கடந்த 2007 ஆம் ஆண்டு மகேக் என்ற ஹிந்தி திரைப்படத்தில் ஆசிரியர் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். இதனை தொடர்ந்து இவருக்கு தமிழ் திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி கடந்த 2009 ஆம் ஆண்டு சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தில் நடித்து சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை பெற்றார்.

30 வயதில் SMS பட நடிகை செய்யும் காரியத்தை பாருங்கள்.! பப்பில் வைத்து நடிகை அனுயாவை உருட்டி எடுத்த அவரது ஆண் நண்பர்..! வைரல் வீடியோ.! - Tamil Spark

   

இவரின் முதல் படத்திலேயே அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்த இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. அதன்படி 2009 ஆம் ஆண்டு மதுரை சம்பவம் என்ற திரைப்படத்தில் நடித்து தனது நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தியிருந்தார். தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு நகரம் என்ற திரைப்படத்தில் நடித்த இவருக்கு 2011 ஆம் ஆண்டு நஞ்சுபுரம் என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

   

திருமணம் செய்யலாமே.. என்னைச் சுற்றி நல்ல ஆண்கள் இல்லை - நடிகை அனுயா

 

அந்த வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டு ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். அதன் பிறகு தமிழில் வெளிவந்த பிக்பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் தமிழ் பேசத்தெரியாத ஒரே காரணத்தால் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் வாரமே எவிக்‌ஷன் மூலம் வெளியேற்றப்பட்டார். பின் இவர் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை. பின்னர் தனியார் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். தனது திரையுலக வாழ்க்கையிலிருந்து 2018 ஆம் ஆண்டோடு விலகினார். பின் எந்தவித திரையுலங்களிலும் தன்னை ஈடுப்படுத்திக்கொள்ளவில்லை.

புடவையில் கிக் ஏத்தும் ஆண்டியாக அசத்தும் SMS பட அனுயா.. பார்வையிலே போதை ஏற்றும் புகைப்படங்கள் – Cinemapettai

2012 ஆம் ஆண்டு நண்பன் மற்றும் நான் படத்தில் நடித்திருந்த இவர் அதன் பிறகு நல்ல திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததால் திரைப்பட வாய்ப்புக்காக காத்திருக்கிறார். இந்த நிலையில் தற்போது அவர் சற்று குண்டாகி உடல் எடை அதிகரித்த நிலையில் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். தற்போது அவருடைய லேட்டஸ்ட் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Anuya Y Bhagwat 666 பதிவைப் பகிர்ந்துள்ளார் (@anuya_y_bhagwat)