என்னையே என்னால காப்பாத்திக்க முடியல.. அந்த இடத்தில் அறுவை சிகிச்சை.. நடிகர் பொன்னம்பலம் உருக்கமான ஆடியோ..!

By Nanthini on ஆனி 26, 2025

Spread the love

தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகர் தான் பொன்னம்பலம். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்த நிலையில் தனக்கு மீண்டும் உடல் நலக்குறைவை ஏற்பட்டு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகின்றார். இது தொடர்பாக அவர் ஆடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் எனக்கு மிகவும் உடல் நல முடியாமல் போய்விட்டது. சென்னையில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் இரண்டு முறை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்றேன்.

மார்க்கெட் இல்லாத வில்லன் நடிகர் பொன்னம்பலம்.. அதிமுகவில் இருந்து விலகி  பாஜகவில் ஐக்கியம் | Actor Ponnambalam joins BJP - Tamil Oneindia

   

மீண்டும் எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிறுநீரக தொற்று இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தேன். தற்போது நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளேன். ஆசன வாய் அருகே அறுவை சிகிச்சை செய்துள்ளனர். முழுமையாக குணமடைய இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும். இன்னும் சில மாதங்களுக்கு என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது. என் உடல் நிலையை அறிந்த சரத்குமார், ரவி மோகன், கே எஸ் ரவிக்குமார், கமல், நிழல்கள் ரவி மற்றும் சிம்பு உள்ளிட்டோர் எனக்கு உதவி செய்தனர். மேலும் பல நடிகர்களும் எனக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். அவர்களுக்கு என்னுடைய நன்றி. பொருளாதாரத்தில் பல சிக்கல்கள் எனக்கு வந்துவிட்டது. என்னையே என்னால் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை.

   

திரைப்படத்துறையினருக்கு நிதியுதவி அளிக்குமாறு நடிகர் பொன்னம்பலம் வேண்டுகோள்  - TeluguBulletin.com

 

இதற்காக நான் யாரையும் குறை சொல்ல மாட்டேன். நான் இன்று உயிரோடு இருப்பதற்கு காரணம் ஆண்டவனின் மிகப்பெரிய சக்திதான். கடந்த ஐந்து வருடமாக எந்த வேலைக்கும் நான் போகவில்லை. மருத்துவமனை சிகிச்சையில் காலம் ஓடிவிட்டது. பொருளாதார பிரச்சனையில் மிகவும் அடிபட்டு தரை மட்டத்திற்கு நான் வந்துவிட்டேன். எனக்கு இப்படி ஆனதை நான் ஒரு குறையாக வெளிப்படுத்த வேண்டாம். நான் கொடுத்து வைத்த பணத்தை யாரிடமும் கேட்கவில்லை. அன்பு மட்டுமே கொடுத்துள்ளேன். அது எனக்கு இரட்டிப்பாக கிடைத்தது. நான் விரைவில் குணமடைய ஆண்டவனை வேண்டிக் கொள்ள வேண்டும் என்று பொன்னம்பலம் அந்த ஆடியோவில் இறுக்கமாக பேசி உள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் தற்போது அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.