சூரியன் மிதுன ராசியில் பிரவேசிக்கும் மாதம் தான் ஆனி மாதம் எனப்படுகிறது. நமது வேத சாஸ்திரங்கள் ஒரு வருடத்தில் மொத்தம் 96 தர்ப்பணங்கள் இருப்பதாக கூறுகின்றன. தமிழ் வருடப்பிறப்பு, சூரிய கிரகணம், அமாவாசை, மகாலய அமாவாசை உட்பட 96 தர்ப்பணங்களையும் ஒருவர் செய்வது சிறப்பு பலன்களை தரும் என அந்த சாஸ்திரங்கள் கூறுகிறது. அதன்படி இன்று ஆனி மாத அமாவாசை. நேற்று மாலை 6.56 மணிக்கு அமாவாசை தொடங்கிவிட்டது. இன்று அதிகாலை குளித்து முடித்து உங்கள் ஊர் இருக்கும் ஆற்றங்கரை அல்லது குளக்கரையில் மைத்ர முகூர்த்த நேரம் எனப்படும் அதிகாலை நேரத்தில் வேதியர்களை கொண்டு உங்கள் மறைந்த முன்னோர்கள், உறவினர்களுக்கு திதி தர்ப்பணம் தர வேண்டும். வீட்டின் பூஜையறையை சுத்தம் செய்து தீபம் ஏற்ற வேண்டும்.
அதன் பிறகு உங்கள் வீட்டில் இருக்கும் மறைந்த முன்னோர்களின் படத்திற்கு பூக்கள் சமர்ப்பித்து தூபங்கள் கொளுத்தி வணங்க வேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலை அமாவாசை திதி மற்றும் தர்ப்பணம் ஆகியவை தர இயலாதவர்கள் அன்றைய தினம் உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு கருப்பு அல்லது வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைப்பதால் முன்னோர்களுக்கு திதியளித்த பலன் கிடைக்கும். தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை வீட்டில் தெய்வ சம்மந்தமான பூஜைகளை ஒத்திவைத்துவிட்டு பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடித்த பிறகு தினசரி செய்ய வேண்டிய பூஜைகளை செய்யலாம்.
அமாவாசை நாட்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. அதனைப் போலவே வெங்காய மற்றும் பூண்டு ஆகியவற்றை தவிர்ப்பதும் நல்லது. பித்ரு வழிபாட்டில் கருப்பு எள் மற்றும் புனிதம் நிறைந்த தர்ப்பை புல் ஆகிய இரண்டும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த இரண்டும் உயர்ந்த சக்தி கொண்டவை. இதனைப் பயன்படுத்தும் போது பித்ருக்கள் முழு திருப்தி அடைகிறார்கள் என்பதுதான் ஐதீகம். தொழில் மட்டும் வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள் நோய்களால் பாதிக்கப்பட்ட உடல்நலம் சேருபவர்கள் ஆணி அமாவாசை தினத்தில் திருஷ்டி பூசணிக்காய் அல்லது எலுமிச்சை பழம் வாங்கி அதன் மீது கற்பூரம் கொளுத்தி உங்களுடைய தொழில் மற்றும் வியாபார இடங்களை திருஷ்டி கழித்து அதற்குரிய பூசணிக்காயை உடைத்தும் எலுமிச்சை பழத்தை நசுக்கியும் திருஷ்டி கழித்து விட வேண்டும்.
இன்று மிகவும் விசேஷமான நாள். சாபங்களையும் பாவங்களையும் துடைத்து தூய்மையாக்கும் நாளாகும். சில குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாக கொடிய வினைகள் சூழ்ந்து நிம்மதி குறைந்து போகும். பல கொடிய பாவங்கள் தீர பிதூர் தேவதைகளை வணங்க வேண்டும். இன்று செய்யக்கூடிய முன்னோர் வழிபாடு குடும்ப ஒற்றுமையை வாங்க செய்யும். வசதி வாய்ப்பு இல்லாதவர்கள் ஒரு பெரியவரை அழைத்து வீட்டில் சாப்பாடு போட்டு உங்களால் இயன்ற தட்சனை கொடுத்து முன்னோர்களின் ஆசி பெற்றுக் கொள்ளுங்கள். இன்று கோதுமை மற்றும் அரிசியை தானமாக வழங்குவது சூரியன் மற்றும் சந்திரனின் ஆசிகளை பெறுவதுடன் ஜாதகத்தில் இந்த இரண்டு கிரகங்களின் பலத்தையும் அதிகரிக்கச் செய்யும்.
