பெரும்பாலும் இன்றைய காலத்தை இளைஞர்கள் பலர் காலை உணவை தவிர்ப்பது என்பது வழக்கமாகிவிட்டது. பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் விரைவாக கிளம்ப வேண்டும் என்பதற்காக காலை உணவை தவிர்த்து விடுகின்றனர். ஆனால் காலை 10 மணிக்குள் சாப்பிட வேண்டியது என்பது உடலியல் ரீதியாக அவசியமானது. காலையில் உணவு இல்லாத நிலையில் உடலில் ஏற்படும் சோர்வு அந்த நாளை அப்படியே மந்தமாக்கி விடும். இது தொடர்ந்து நீடித்தால் வயிற்றுப்புண் உள்ளிட்ட நோய்களுக்கு முக்கிய காரணமாக அமைந்து விடும். அதனைப் போலவே 12.30 மணி முதல் 2:00 மணிக்குள் மதிய உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் மதிய உணவு நேரம் பெரும்பாலும் தள்ளிப்போகிறது.
இதனால் உடலுக்கு தேவையான சக்தி கிடைக்காமல் சர்க்கரை மட்டும் குழைந்து தூக்கம் வருதல், செரிமான கோளாறுகள் மற்றும் ஆற்றல் குறைபாடு போன்றவை ஏற்படும். மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை நறுக்கிய பழங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இது மூளையின் சோர்வை சமாளிக்க உதவும். ஆனால் நாம் பெரும்பாலும் இந்த நேரத்தில் டீ மற்றும் காபி அல்லது ஏதாவது துரித உணவுகளால் நிரப்பி கொள்கிறோம். இதனால் இரவு நேரத்திற்கு முன்பே உடல் சக்தி இழந்து அதற்கு பதிலாக அதிகமான இரவு உணவுக்கு பழக்கப்பட்டு விடுகிறார்கள். இது உடலின் சராசரி எடை கட்டுப்பாட்டை வீர செல்கின்றது.
இரவு உணவை சூரியன் மறைவதற்கு முன்பாக முடித்து விடுவது என்பது சுவாச மற்றும் செரிமானம் ஆகியவற்றை சீராக வைத்துக் கொள்ள உதவும். ஆனால் பெரும்பாலும் இரவு 9 முதல் 10 மணிக்கு பிறகுதான் சாப்பிடும் பழக்கம் நிறைய குடும்பங்களில் உள்ளது. இதனால் உணவு முழுமையாக ஜீரணிக்காத போது அது கொழுப்பாக மாறி உடலில் சேமிக்கப்படுகிறது. நீண்ட காலத்தில் இது நீரிழிவு, கொழுப்பும், பித்தப்பை கற்கள் ஆகியவற்றை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்துகின்றது. ஒரு கட்டத்தில் தூக்கமின்மைக்கு இது முதன்மை காரணமாக அமைந்து விடுகிறது. நாம் எடுத்துக் கொள்ளும் சீரற்ற உணவுகளால் ஹார்மோன்கள் பாதிக்கப்படுகிறது. உடல் சோர்வடைவது மட்டுமல்லாமல் மன அழுத்தம் கூடும். இளம் வயதிலேயே திடீர் எடை கூடுதல், ஹார்மோன் மாற்றம், மாரடைப்பு, மாதவிடாய் பிரச்சனைகள் ஆகியவை இதிலிருந்து தோன்றுகிறது. எனவே ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.
