இந்தகாலத்துல இப்படியொரு மனுஷனா..? உங்க பணத்துல எனக்கு ஒரு பைசா வேண்டாம்… ஆட்டோ டிரைவரின் செயலால் பூரித்துப்போன வியாபாரி..!!

By Soundarya on ஆனி 23, 2025

Spread the love

மிசோரோமில் உள்ள லாங்ட்லாயை சேர்ந்தவர் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் லால்மிங்முனா. இவருடைய  ஆட்டோவில் மியான்மரைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் பயணம் செய்துள்ளார். கடந்த வியாழக்கிழமை இரவு 9 மணி அளவில் பயணம் செய்த அந்த வியாபாரி ஒரு பாலிதீன் பையில் 17 லட்சம் ரூபாயை கொண்டு வந்திருக்கிறார். அவர் இறங்க வேண்டிய இடம் வந்ததும் இறங்கிவிட்டார். ஆனால் பணப் பையை தவறுதலாக மறந்து ஆட்டோவில் வைத்துவிட்டு சென்றார். பிறகு ஆட்டோ ஓட்டுநர் பணத்தோடு ஆட்டோவில் அங்கிருந்து சென்றிருக்கிறார்.

பிறகு சிறிது தூரம் சென்றபின் ஆட்டோவில் பணம் இருப்பதை பார்த்த அவர் அதை அந்த வியாபாரி  இறங்கிய ஹோட்டலுக்கே சென்று மீண்டும் அவரிடமே ஒப்படைத்துள்ளார். அப்போது அந்த வியாபாரி அந்த பையில் இருந்த பணத்தை அப்படியே திருப்பி கொடுத்ததற்காக ஏதாவது வெகுமதி வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் அந்த ஆட்டோ டிரைவஏ எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். ஆட்டோ டிரைவரின் இந்த செயலுக்காக பலரும் பாராட்டி வருகிறார்கள்.