மலேசியாவில் விடுமுறையில் சுற்றுலா சென்ற பெண் ஊழியரிடம் முதலாளி லைவ் லொகேஷன் பகிருமாறு வற்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் ஒருவர் விடுமுறையில் மலேசிய தீவுக்கு சுற்றுலா சென்றிருந்தார். இப்படியான நிலையில் அவருடைய முதலாளியை விடுப்பு விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்வதற்கு அவர் தனது லைவ் லொகேஷன்-ஐ பகிர வேண்டும் என்று கேட்டுள்ளார். இது ஒரு புதிய விதி என்றும் இருப்பிடத்தை பகிர தவறினால் விடுப்பு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
லொகேஷன் அனுப்பினால் மட்டுமே விடுமுறை கொடுக்க முடியும். இல்லையென்றால் விடுமுறை கொடுக்க முடியாது என்று கூறியதால் ஊழியர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது தனி உரிமை மீறல் என அவர் கொந்தளித்த நிலையில் இது நிறுவனத்தின் புதிய விதி என மேலாளர் கூறியுள்ளார். வெளிநாடு செல்லும்போது கூட இது பொருந்தும் என்று அவர் கூறிய நிலையில் இந்த செய்தியை அவர் சமூக வலைத்தளத்தில் பகிர தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
