ஆங்கிலம் பேசும் இந்தியர்கள் வெட்கப்படும் நாள் வெகுதூரம் இல்லை… மத்திய அமைச்சர் அமித்ஷா பேசசு..!!

By Soundarya on ஆனி 19, 2025

Spread the love

இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்பட வேண்டிய நாள் விரைவில் வரும் என்று அமைச்சர் அமித்ஷா கூறி இருக்கிறார். மேலும் இந்தியாவின் மொழி பாரம்பரியத்தை மீட்டெடுக்க வேண்டிய  நேரம் இது என்றும் கூறியிருக்கிறார். டெல்லியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்கினிஹோத்ரி எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்  அமித்ஷா. அப்போது பேசிய அவர், “நான் சொல்வதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த நாட்டில் ஒரு சமூகம் ஆங்கிலம் பேசுவதற்கு வெட்கப்படும் நாள் வெகு தூரம் இல்லை. ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படும் ஒரு சமூகம் விரைவில் இங்கே உருவாகும். அவர்கள் தான் இந்த நாட்டில் மாற்றத்தை கொண்டு வரப் போகிறார்கள்.

நம்முடைய நாட்டின் மொழிகள் நம்முடைய கலாச்சாரத்தின் ரத்தினங்கள். மொழிகள் இல்லாமல் உண்மையான இந்தியர்கள் இல்லை. ஒரு அந்நிய நாட்டு மொழியில் நம்முடைய வரலாறு, கலாச்சார மதத்தை எளிதில் புரிந்து கொள்ள முடியாது. போர் எவ்வளவு கடினம் என்பதை நமக்கு நன்றாகவே தெரியும். இந்திய சமூகம் இந்த போரில் நிச்சயம் வெற்றி பெறும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நம்முடைய மொழிகளில் பெருமையோடு நாம் இந்த நாட்டை வழி நடத்துவோம். சித்தாந்தப்படுத்துவோம், ஆராய்ச்சி செய்வோம், முடிவுகளை எடுப்போம். இந்த உலகை ஆள்வோம். இது குறித்து யாரும் சந்தேகப்பட தேவையில்லை என்று கூறியிருக்கிறார் .