“யப்பா சாமி நல்லவேளை ஹனிமூன் போகல” காதலனோடு ஓடிப்போன மனைவி… நிம்மதியில் பெருமூச்சுவிட்ட கணவர்..!!

By Soundarya on ஆனி 19, 2025

Spread the love

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சுனில். இவருக்கு கடந்த மே மாதம் குஷ்பூ என்பவரோடு திருமணம் நடந்தது .திருமணமான ஒன்பது நாட்கள் கணவர் வீட்டில் தங்கி இருந்த குஷ்பூ திருமண சடங்கிற்காக தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தன்னுடைய காதலனுடன் வீட்டை விட்டு ஓடியுள்ளார். இதனையடுத்து தன்னுடைய மனைவியை காணவில்லை என்று சுனில் காவல் நிலையத்தில் புகார் அளித்த போது தான் குஷ்பூ தன்னுடைய காதலனோடு காவல் நிலையத்திற்கு வந்து உள்ளார். பின்பு தனக்கு சுனிலை பிடிக்கவில்லை காதலனோடு சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சுனில் தன்னுடைய மனைவியை காதலனோடு சேர்ந்து வாழுமாறு கூறி அனுப்பி வைத்துள்ளார். மேலும் திருமணத்தின் போது போடப்பட்ட நகைகளையும் கொடுத்துள்ளார். அதன் பிறகு அந்த நகைகளை எல்லாம் வாங்கிக்கொண்டு குஷ்பூ தன்னுடைய காதலனோடு சென்று  ள்ளார். பின்னர் இதுகுறித்து சுனில் கூறுகையில், “ஹனிமூன் போகலாம் என்றெல்லாம் கனவு கண்டேன். குஷ்புவை சர்பிரைஸ் செய்யலாம் என்றும் ஆசைப்பட்டேன்.

   

அதற்குள் இப்படி நடந்து விட்டது. அதனால் தான் காதலனோடு அனுப்பி வைத்துவிட்டேன். நல்லவேளை ராஜாவை போல நான் ஆகவில்லை. ஹனிமூன் போகாமல் நான் உயிரோடு பிழைத்து இருக்கிறேன். இன்னொரு ராஜா ரகுவன்சியாக நான் ஆகவில்லை .என்னுடைய வாழ்க்கை காப்பாற்றப்பட்டது” என்று பேசி இருக்கிறார்.