யார் அந்த சஞ்சய்..? 112 முறை செல்போனில் பேசிய சோனம்… இந்தியாவை உலுக்கிய ஹனிமூன் கொலையில் பகீர் தகவல்..!!

By Soundarya on ஆனி 19, 2025

Spread the love

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்சி. இவருடைய கொலை வழக்கில் ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல் தான் வெளியாகி பகீர் கிளப்பி கொண்டிருக்கிறது. அதாவது இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட மனைவி சோனம் ரகுவன்சி கடந்த மார்ச் ஒன்றாம் தேதி முதல் 28ஆம் தேதி வரை சஞ்சய் வர்மா என்ற நபரோடு 112 முறை செல்போனில் பேசியிருந்ததும் அழைப்பு விவரங்களில் உறுதியாக இருக்கிறது. இதனை அடுத்து சஞ்சய் வர்மா யார் ? என்பது  குறித்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் சோனம் உட்பட நான்கு பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். விசாரணையின் ஒரு பகுதியாக சம்பவம் நடந்த இடத்தில் காவல்துறையினர் ராஜாவை கொன்ற ஆயுதத்தை கைப்பற்றி இருக்கிறார்கள்.

இதனையடுத்து சோனத்தின் அழைப்பு விவரங்களில் இந்த வழக்கில் மூன்றாவது முக்கிய நபரான சஞ்சய் இருப்பது தெரியவந்துள்ளது. இவருடைய தொலைபேசி எண் தற்போது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அவர்  எங்கே இருக்கிறார்  என்று தெரியவில்லை என்றும் கூறுகிறார்கள் காவல்துறையினர். சோனத்தின் சகோதரர், சஞ்சய் தனிப்பட்ட முறையில் தனக்கு தெரியவில்லை என்று கூறியிருக்கிறார். இருப்பினும் அவருடைய அழைப்பு தொடர்பு  விவரம் தெளிவாக காட்டுவதால் சஞ்சய் மீது பெரும் சந்தேகங்கள் எழுந்துள்ளது. தற்போது காவல்துறையினர் அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.