இனி 15 நாட்களில் உங்கள் கையில் வோட்டர் ஐடி… தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு..!

By Nanthini on ஆனி 19, 2025

Spread the love

வாக்காளர் பட்டியலில் புதுப்பிக்கப்பட்ட 15 நாட்களில் புதிய வாக்காளர் அடையாள அட்டையை பெற வசதியாக புதிய முறை அறிமுகம் செய்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வாக்காளர் வசதியை மேம்படுத்தவும் விரைவாக வழங்கும் ஒரு புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்பட்ட 15 நாட்களுக்குள் வாக்காளர் புகைப்பட அட்டைகளை வழங்க முடியும். இதில் ஒரு வாக்காளர் புதிதாகவோ அல்லது ஏற்கனவே உள்ள வாக்காளர்களின் விவரங்களில் ஏதேனும் மாற்றம் சேர்த்தல் அல்லது நீக்குதல் ஆகியவை அடங்கும்.

இது புதிதாக பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களுக்கும் தங்கள் விவரங்களை புதுப்பிக்கும் ஏற்கனவே உள்ள வாக்காளர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய முறையில் வாக்காளர் பதிவு அதிகாரிகளால் அஞ்சல் துறை மூலம் வாக்காளருக்கு அட்டை வழங்கப்படும் வரை ஒவ்வொரு கட்டத்தையும் நிகழ நேர கண்காணிப்பை உறுதி செய்யும் வகையில் வாக்காளர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் அறிவிப்புகள் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.