விரும்பாத திருமணம்.. தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவி… நொடி பொழுதில் உயிரை காப்பாற்றிய instagram..!

By Nanthini on ஆனி 19, 2025

Spread the love

உத்திரபிரதேசம் மாநிலம் அருகே தேவனந்தபூர் பகுதியை சேர்ந்த ஒரு மாணவி முதுநிலை இறுதியாண்டு படித்து வந்துள்ளார். 21 வயதாகும் இவருக்கு வீட்டில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்த நிலையில் அவருக்கு அதில் உடன்பாடு இல்லை. இதனால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “குட்பாய் சாரி அம்மா அப்பா”என்று கூறி மாத்திரைகளின் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். கடந்த ஜூன் 16ஆம் தேதி இரவு 7.42 மணிக்கு வெளியீட்ட இந்த பதிவு தொடர்பாக இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டாவுக்கு தொழில்நுட்ப முறையில் எச்சரிக்கை அறிவிப்பு சென்றுள்ளது.

உடனே அந்த நிறுவனம் அந்த பதிவு குறித்து மாநில போலீஸ் தலைமையகத்திற்கு தகவல் பரிமாற்றம் செய்து தற்கொலை முயற்சியை தடுக்க எச்சரிக்கை செய்துள்ளனர். தகவல் கிடைத்ததும் போலீசார் அந்த பகுதிக்கு சென்று தற்கொலைக்கு முயன்ற அந்தப் பெண்ணை தடுக்கும் முயற்சியில் இறங்கினர். தகவல் வந்த எட்டு நிமிடங்களில் போலீசார் பெண்ணின் வீட்டை சென்று அடைந்தனர். உடனே அந்த மாணவியின் பெற்றோரிடம் பேசிய போலீசார் மாணவிக்கு மருத்துவ கவுன்சிலிங் வழங்கினார்கள். தற்கொலைக்கு முயன்ற மாணவியை நொடிப்பொழுதில் இன்ஸ்டாகிராம் காப்பாற்றிய இந்த சம்பவம் நெகிழ வைத்துள்ளது.