ரெக்கார்டிங் வராமல் தூங்கிய எம்எஸ்வி.. கடுப்பில் கண்ணதாசன் எழுதிய வரிகள்.. அட அதுதான் இதுவா..?

By Nanthini on ஆனி 19, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் முக்கிய கவிஞர்களில் கண்ணதாசனுக்கு என்ற தனி ஒரு இடம் உள்ளது. வாழ்க்கையின் தத்துவங்களை தன்னுடைய பாடல்கள் மூலமாக ஒலிக்கச் செய்த கண்ணதாசன் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். மேலும் கதை ஆசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என்று பன்முக திறமை கொண்டவராக கண்ணதாசன் விளங்கினார். அதனைப் போல கிளாசிக் சினிமாவில் தன்னுடைய மெல்லிசையால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் தான் மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன். இவரும் கண்ணதாசனுடன் இணைந்து பல வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

சினிமா பைத்தியமான எம்எஸ்வி... நடிகர் இசையமைப்பாளர் ஆனது எப்படி?

   

இதனிடையே எம்ஜிஆர் 1963ஆம் ஆண்டு ஆர்ஆர் பிக்சர்ஸ் தயாரிப்பில் டி ஆர் ராமண்ணா இயக்கத்தில் நடித்த படம் தான் பெரிய இடத்துப் பெண். இந்த படத்திற்கு எம் எஸ் விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார். படத்திற்கு பாடல் எழுத கண்ணதாசன் கமிட்டாகி இருந்த நிலையில் படத்திற்கான கம்போசிங் நடைபெறும் போது வழக்கமாக லேட்டாக வராமல் சீக்கிரம் வாருங்கள் என்று எம் எஸ் வி சொல்ல அதனைப் போல மறுநாள் கண்ணதாசன் சீக்கிரம் வந்துள்ளார். ஆனால் மற்ற படங்களின் இசையமைப்பு மற்றும் பாடல் பதிவு பணிகள் காரணமாக எம்.எஸ்.வி வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்துள்ளார்.

   

மெல்லிசை மன்னரும், கவியரசரும்... எம்.எஸ்.விஸ்வநாதன் - கண்ணதாசன் காம்போவின்  எவர்கிரீன் பாடல்கள்! | M. S. Viswanathan and Kannadasan combo evergreen  songs list

 

அன்று சீக்கிரமாக வந்த கண்ணதாசன் எம் எஸ் வி வீட்டுக்கு போன் செய்த போது போனை எடுத்த உதவியாளர் சார் தூங்கிட்டு இருக்காரு என்று கூறிவிட்டார். பிறகு கண்ணதாசன் சில நிமிடங்கள் காத்திருந்த நிலையில் படத்தின் இயக்குனர் வந்து பாடலுக்கான சூழ்நிலையை கூற இரண்டு வரிகள் எழுதி இதற்கு இசை அமைக்க சொல்லுங்கள் நீதி வரிகளை நான் வந்து எழுதுகிறேன் என்று கண்ணதாசன் கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டாராம். சிறிது நேரம் கழித்து எழுந்து அவசர அவசரமாக வந்த எம் எஸ் வி கண்ணதாசன் கொடுத்த வரிகளை படித்துள்ளார். அதில் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது படத்தின் சுச்சுவேஷனை புரிந்து கொண்ட கண்ணதாசன் தன்னை சீக்கிரமாக வரச் சொல்லிவிட்டு தூங்கிய எம் எஸ் வி இரண்டையும் இணைத்து “அவனுக்கென்ன தூங்கி விட்டான் அகப்பட்டவன் நான் அல்லவா என்ற பாடலை எழுதியிருக்கிறார். இந்தப் பாடல் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் இந்த சம்பவத்தை எம் எஸ் வி ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.