Trump Mobile அறிமுகம்: விலை, Features இதுதான்.. நீங்களுக்கு புக் பண்ணுங்க..!

By Nanthini on ஆனி 17, 2025

Spread the love

நெட்வொர்க் சேவையுடன் கூடிய புதிய ஸ்மார்ட்போனை, அமெரிக்க அதிபர் டிரம்பின் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. வரும் செப்டம்பர் மாதம் முதல் ஸ்மார்ட்போன் மற்றும் தகவல் தொடர்பு சேவை இணைப்பு கிடைக்கும் என, அதிபரின் நிறுவனமான, டிரம்ப் ஆர்கனைசேஷன் அறிவித்துள்ளது. ‘Trump Mobile’ என்ற பெயரில் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது Trump Organization. T1 Phone 8002 மாடலான இந்த போன் 256 GB internal storage, 50 mp மெயின் கேமரா, 16MP செல்பி கேமரா, AI Face Censor போன்ற வசதிகளை உள்ளடக்கியது.

இதன் விலை ரூ.42,863 என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் the 47 Plan என்ற பெயரில் 5G சிம் கார்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அன்லிமிடெட் டாக் டைம், SMS, Data உடன் ரூ.4,077 monthly pack இல் ரீசார்ஜ் செய்யலாம். அமெரிக்க கொடி பதிக்கப்பட்ட, தங்க நிறத்தில் இந்த ஸ்மார்ட்போன் இருக்கும் என்றும் இதை வாங்க, முன்பதிவு துவங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.