மனசே பதறுது… அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கை… குஜராத் விமான விபத்து குறித்து விஜய் வேதனை..!!

By Soundarya on ஆனி 13, 2025

Spread the love

நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் நிச்சயமில்லாதது என்று விஜய் குஜராத் விமான நிகழ்வு குறித்து வேதனை தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றி கழகத்தின் கல்வி விருதுகள் வழங்கும் விழாவானது மாமல்லபுரத்தில் இன்று மூன்றாம் கட்டமாக நடைபெற்று வருகிறது . அதில் விமான விபத்தில் இறந்தவர்களுக்கு தவெக சார்பில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் நிகழ்ச்சியில் பேசிய விஜய், ” குஜராத்தில் நடந்த விமான விபத்து காட்சிகளை பார்க்கும் பொழுது மனது பதறுகிறது.

   

அடுத்த நொடி நிச்சயம் இல்லாத வாழ்க்கை. அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவோம். குஜராத் விமான விபத்து ஒரு சோகமான நிகழ்வு. அது தொடர்பான படங்கள் வீடியோக்களை பார்க்கும் பொழுது மனம் பதறுகிறது.  நேற்று நடந்த குஜராத் விமான விபத்தில் 241 பயணிகள் உட்பட 265 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.