அந்த ஒரு விஷயத்துக்காக ரஜினி கூட நடிக்கிற வாய்ப்பு மிஸ் பண்ணிட்டேன்.. பல வருடம் கழித்து மனம் திறக்கும் சிம்ரன்..!!

By Nanthini on ஆனி 9, 2025

Spread the love

பாசில் இயக்கத்தில் வெளியான மணிசித்திரதாழு என்ற படத்தை பி வாசு முதலில் கன்னடத்தில் ரீமேக் செய்தார். அங்கு மெகா ஹிட் அடித்தது. இப்படியான சூழலில் பாபா படத்தில் படுதோல்வியை ரஜினி சந்தித்ததால் நல்ல கதைக்காக இரண்டு வருடங்கள் காத்திருந்தார். அப்படி அவரிடம் சொன்ன கதை தான் சந்திரமுகி. கன்னடத்தில் இருந்து கொஞ்சம் மாற்றி தமிழுக்கு ஏற்றது போல வாசு கதையை ரெடி செய்தார். இந்த படத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, வடிவேலு, பிரபு மற்றும் நயன்தாரா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த நிலையில் வடிவேலுவின் காமெடி, ஜோதிகாவின் அட்டகாசமான நடிப்பு, அருமையான திரைக்கதை, அட்டகாசமான க்ளைமேக்ஸ் என அனைத்தும் கலந்து படம் மெகா hit அடித்தது.

சந்திரமுகி ஜோதிகா கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த பிரபலம்.. 16 வருடங்கள்  பிறகு வெளிவந்த ரகசியம்! - Cinemapettai

   

மொத்தம் 800 நாட்களுக்கும் மேல் ஓடிய பெரும் சாதனை படைத்தது. இப்படியான நிலையில் சந்திரமுகி திரைப்படத்தின் வாய்ப்பை தன் தவறவிட்டது குறித்து நடிகை சிம்ரன் சமீபத்தில் அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதில், சந்திரமுகி திரைப்படத்தில் ஜோதிகா நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நான் தான் நடிக்க வேண்டி இருந்தது. என்னுடைய குடும்பத்திற்காக அப்போது நான் அந்த படத்தில் இருந்து விலக வேண்டிய சூழல் உருவானது. ரஜினி சாரோட நடிக்கிற வாய்ப்பை அப்போ நான் மிஸ் பண்ணிட்டேன். அதன் பிறகு அந்த வாய்ப்பு பேட்ட திரைப்படத்தில் எனக்கு அமைந்தது என சிம்ரன் பேசியுள்ள.