நடிகர் அல்லு அர்ஜுன், அனுஷ்கா, மஞ்சு மனோஜ் ஆகியோர் இணைந்து நடித்த வெளிவந்த படம் வேதம். இந்த படம் 2010ல் வெளியானது. கிரிஷ் இந்த படத்தை இயக்கினார். இந்த படம் தமிழில் ரீமேக்காக சிம்பு, அனுஷ்கா, பரத் ஆகியோர் நடித்து வானம் என்னும் பெயரில் வெளிவந்தது. தெலுங்கில் ஹிட் அடித்த படம் தமிழில் சுமாரான வரவேற்பை தான் பெற்று வந்தது. இந்த படம் வெளியாகி சுமார் 15 வருடங்கள் முடிந்துவிட்டது.

இந்த நிலையில் இந்த படம் குறித்து கிரிஷ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதாவது, “வேதம் படத்தின் ப்ரோமோஷன்காக அனுஷ்காவின் கிளாமரான போஸ்டர் ஒன்றை சிட்டியின் முக்கிய பகுதிகளில் விளம்பரத்திற்காக பயன்படுத்தினோம். அதனால் சுமார் 40 விபத்துக்கள் ஏற்பட்டது என்று வழக்குப்பதிவானது. இதனால் அந்த விளம்பர போஸ்டர் அகற்றினோம்” என்று கூறியுள்ளார்.
